இன்னொரு குரல் 3 நிமிட வாசிப்பு

சந்தா கட்ட வழி சொல்லுங்கள்!

வாசகர்கள்
06 Oct 2021, 5:00 am
2

சந்தா கட்ட வழி சொல்லுங்கள்! 

உலக அளவிலும், இந்திய அளவிலும் முன்மாதிரியாக உள்ள இதழியல் தமிழிலும் நிகழ வேண்டும். சந்தா செலுத்தி அத்தகைய தொழில் நேர்த்தியான இதழியலை ஆதரிக்க விழைகிறேன். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

- சிவசங்கரன் சோமஸ்கந்தன்

யாருடைய யோசனை இது? @ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சரியான ஒரு முன்மாதிரி இல்லை, ஏன்?

நல்ல பதிவு. வங்கிகளின் தனித்துவம் அப்பகுதி மக்களுக்குச் செம்மையாக செயல்படுவதில்தான் உள்ளது. ஒன்றிய அரசுக்கு மக்களைத் திசை திருப்ப இதுபோல் கோளாறான யோசனைகள் வருகின்றனவா அல்லது நாட்டைச் சுரண்ட நினைக்கும் பெருநிறுவனங்கள் இவ்வாறு ஆலோசனை வழங்குகிறார்களா? அரசின் செயல்பாடு மக்களுக்கானதாக இருக்க வேண்டும்!

- நேசன்

கூட்டுக் குழு அமைக்க வேண்டும் @ பள்ளிகள் திறப்போடு புதிய செயல்முறைக்கும் திட்டமிடுங்கள்

இப்பெருந்தொற்று காலத்தில், பள்ளித் திறப்பு என்பது சவாலுக்குரிய செயல்பாடாகும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் சுகாதார கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. கிராமப்புற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தொகுப்பூதியத்தில் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நகர்புறப் பள்ளிகளில் இந்த வசதி இல்லை. பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறைத் தூய்மைப் பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. தலையங்கம் குறிப்பிடுவதுபோல, கல்வியாளர்கள், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளலாம். மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் அமைவிடச் சூழல், இவற்றைக் கவனத்தில் கொண்டு நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கான வாய்ப்புகளோடு திட்டமிட்டால் சிறப்பாக இருக்கும்.  

- அண்ணா ரவி 

திகில் கதைபோல இருக்கிறது @ கறுப்புச் சட்டத்திற்குப் பச்சை விளக்கு காட்டுகிறதா தமிழக அரசு?

ஒரு திகில் கதையைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அசாத்தியமான ஆய்வு இக்கட்டுரையின் தனிச்சிறப்பு. முதல்வர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணன் கிருஷ்ணமூர்த்தி 

முதல்வர் ஸ்டாலின் செவிமடுப்பார் என நம்புவோம்.

-கே.ராமசாமி

பா.வெ. அருமை @ பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் - பா.வெங்கடேசன் பேட்டி

வழமைபோல் பா.வெங்கடேசனின் இந்தப் பேட்டியும் அருமை. இந்தச் சிறுகதையை அறிமுகப்படுத்தியதற்கு த.ராஜனுக்கு நன்றி.

- கதிரவன் ரத்தினவேல்

பா.வெங்கடேசனின் எழுத்து அபாரம்

- பாரதிராஜா டி. 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Baratiraja C   3 years ago

நீங்கள் நினைத்த மாதிரி "அருஞ்சொல்" அமைய வாழ்த்துக்கள் நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    3 years ago

அருமையான துவக்கம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சேரன்கரண் தாப்பர் பேட்டிபாலிவுட் நட்சத்திரங்கள்அச்சமின்றி வாழ்வதற்கான எனது உரிமைபிராஜெக்ட் சிரியஸ்பிஹாரிவளையக் கூடாதது செங்கோல்!அசோக் செல்வன் திருமணம்மேலும் ஜனநாயகப்படட்டும் புத்தகக்காட்சிகள்மைசூருதூய்மைசட்டப் பாதுகாப்புநேரு-காந்தி குடும்பம்ஓய்வூதியக் காப்பீடுமொழிமதுக் கொள்கைஉற்சாகம் தரும் காலை உணவுராஜ்பவனங்கள் காரியபவனங்களாக மாறிவிட்டன?அதிபர்கள்எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதைபாலஸ்தீனர்களுக்கு இந்தியா ஆதரவில்லையா?அரசு வேலை பெற அலைமோதும் சீன இளைஞர்கள்நவீனத் தமிழ்க் கவிதைகரிகாலச் சோழன் பொங்கல்அசோக் தன்வர்முன்னேற்றம்கங்கணா ரனாவத்க்ரியாகௌதம் பாட்டியாமாம்பழம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!