இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு

கேள்வி - பதில் பகுதியை வாரத்துக்கு ஒருமுறை கொண்டுவாருங்கள்!

வாசகர்கள்
18 Oct 2021, 4:59 am
0

தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

நீதித் துறையையே நாணமுறச் செய்யும் செயல்...

@ செமி-கன்டக்டர்கள் தட்டுப்பாட்டை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம், ஏன்?
“தமிழ்நாட்டிலிருந்து போட்டித் தேர்வுக்குகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், அன்றாடம் ஒரு பதிவையேனும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘அருஞ்சொல்’ செயலாற்றுகிறது” என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. சீனா - தைவான் இடையே என்ன பிரச்சினை? சுருக்கமான தகவல்களுடன் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும் எளிமையான கட்டுரை. நன்றி! 

தமிழ்நாட்டில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஆங்கில தினசரிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. தமிழ் நாளிதழ்கள் பெரும்பாலும் ஒற்றைச் சார்புநிலை கொண்டதாக இருப்பது கவலைக்குரிய செயல். ‘அருஞ்சொல்’லின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. கூடவே, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவழைத்து, தகுதியான படைப்புகளுக்கு இடம் அளிப்பதும் தேர்வர்களுக்குப் பயிற்சியாகவும் ஊக்கமாகவும் அமையும். ’அருஞ்சொல்’லின் அருஞ்செயலாகவும் அமையும்.

- பி.கு.

செமி-கன்டக்டர்கள் தயாரிப்பு குறித்தும், அதன் அரசியல் குறித்தும் தமிழில் எழுதியமைக்கு நன்றி. ஒரு சிறிய திருத்தம். அமெரிக்கா அதிகம் வைத்திருப்பது செமி-கன்டக்டர்கள் சார்ந்த இன்டலக்சுவல் பிராபர்டி (ஐபி). இன்டர்நெட் புரோடாகால் என்பது வேறு.

- பிரபு முருகானந்தம்

100 பேர் தயார்பண்ணச் சொன்னார் பிரபாகரன்: திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் பேட்டிக்குப் பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசு எழுதிய கண்டனக் கடிதத்தைப் படித்தேன். ஆர்எஸ்எஸ் என்பது சாதியத்தைக் காப்பாற்றும் அமைப்பு; வருணாசிரமத்தைக் காப்பாற்றும் அமைப்பு; பார்ப்பனீய அமைப்பு. அப்படி இருக்கும்போது அதை விமர்சிக்கத்தான் செய்வார்கள்.

- சுந்தர் கோபாலகிருஷ்ணன்

நீதிபதிகளின் ஊர்மாற்றம் எழுப்பும் கேள்விகள்

நீதிபதி எம்.எஸ்.எஸ்.ராமச்சந்திர ராவ் உட்பட்டவர்களுக்கு நேர்ந்தது நீதித் துறை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அரசுத் துறைகளில் காணும் ‘தான்-பிறர் அரசியல்’ நீதித் துறையிலும் களங்கம் ஏற்படுத்த தொடங்கியிருப்பதைச் சகிக்க இயலவில்லை. தன் மொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி அசமத்துவத்திற்கான பாதையமைப்பதில் நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல போலும்!

- விஜயகுமார்

 

நாம் அனைவரும் முட்டாள்கள் என்று பாஜக அரசு நினைக்கிறது. அடுத்தத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

- மூர்த்தி 

 

 @ ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்

வாரந்தோறும் ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்’ பகுதி வெளியாக ஏற்பாடுசெய்யுங்கள். நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருந்து ஏமாந்துபோகிறேன். அடுத்தடுத்த கேள்விகள் அதற்குள் முளைத்துவிடுகின்றன. ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் அச்சு ஊடகங்களைப் பற்றி  எழுதிய கருத்துகளை சமஸ் எப்படிப் பார்க்கிறார்? அதேபோல, கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி சமஸ் முகநூலில் எழுப்பிய குறிப்புக்கு பத்திரிகையாளர் கவின்மலர் ஒரு பதில் எழுதியிருக்கிறார். நியாயமாக அது இருக்கிறது. அதுபற்றி சமஸ் என்ன நினைக்கிறார்?

- சுபலக்ஷ்மி   

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







கிளாட் ஒன்வேட்பாளர்ஜனநாயகமே பற்றாக்குறை!வேளாண்மைத் துறைமின்சார சீர்திருத்தம்அதிகாரத்தின் வடிவங்கள்சில இடதுசாரித் தோழர்களின் எதிர்வினையும்தோள் வலிஸ்டாலினிஸ்ட்டுகள்ஞாநிஜெயங்கொண்டம்குற்றவாளிதென்காசிபருவநிலை மாற்றம்வர்ண கோட்பாடுபெலகாவிதிருத்தங்கள்சண்முகநாதன் பேட்டிதேவனூரா மகாதேவா ‘உண்மையான மனிதர்’மென் இந்துத்துவம்பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது?சீனப் பிள்ளையார்ஏழைகள்பொது சுகாதாரம்மாணவிகள்ஜம்முதான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடிமேற்கு வங்க அரசுடாக்டர் வெ.ஜீவானந்தம்பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!