கட்டுரை, ஆரோக்கியம், வாழ்வியல், சுற்றுச்சூழல் 2 நிமிட வாசிப்பு
வாஷிங்டன்: காய்ச்சிய நீர் குடிக்க அறிவுரை
அமெரிக்காவின் முக்கியமான நதிகளில் ஒன்று போடோமக் நதி. அந்த நதி நீரைச் சார்ந்து வாஷிங்டன், ஆர்லிங்டன் மற்றும் வர்ஜீனியா மாநிலங்களில் 9,20,000 பேர் வசிக்கின்றனர். சமீபத்தில் போடோமக் நதியில் பாசி படர்வதைக் கண்டறிந்தனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சிக் குடிக்க வேண்டும் என அந்த மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நீரின் பாதுகாப்புத்தன்னையை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை கொதி நீரையே குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பென்டகான், ஆர்லிங்டன் தேசிய கல்லறைத் தோட்டம் மற்றும் ரீகன் தேசிய விமான நிலையப் பகுதிகள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கொலம்பியா மாவட்ட நீர் மற்றும் கழிவுநீர் ஆணையம் கூறியுள்ளது.
‘ஒட்டுமொத்த நகரமும் கொதி நீர் குடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழக்கத்துக்கு மாறானது. இதுபோன்ற ஒரு பெரியளவிலான எச்சரிக்கையை நான் வேலை செய்யும் இந்த 11 ஆண்டுகளில் பார்த்ததில்லை’ என்கிறார் வாஷிங்டன்னைச் சேர்ந்த ஜான் லிஸ்லே. ‘நீரின் தரம் குறைந்திருப்பதற்கு அடையாளமாகவே இந்த கலங்கலான நீர் இருக்கக்கூடும்’ என்கிறது ஆர்லிங்டன் மாநில அறிக்கை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்த நீரில் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் இருக்கலாம். இதனால் குமட்டல், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற நோய்கள் வர வாய்ப்புண்டு. இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏனையோரின் நோய் எதிர்ப்புச் சக்தியை மிகவும் பாதிக்கும். புதன் கிழமை (03.07.2024) இரவு 9 மணிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பானங்கள், ஐஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம். மேலும், நீரைக் குறைந்தது ஒரு நிமிடமாவது கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரைக் குடிப்பதற்கு, பல் துலக்குவதற்கு, உணவுப் பண்டங்களைக் கழுவுவதற்கு, குழந்தைக்கு உணவு தயாரிப்பதற்கு, ஐஸ் தயாரிப்பதற்கோ அல்லது பிராணிகளுக்குக் கொடுப்பதற்கு முன்பு சற்று ஆறவிட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிலைமை சீராவது எப்போது?
டேலகார்லியா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த பரிசோதனையில் நீர் கலங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீரில் பாசியும் கலங்கிய நீரின் அளவும் அதிகரிப்பதை அவதானித்தனர். மக்கள் தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் வடிகட்டிகளில் வடிப்பதிலேயே நீரின் திறன் அதிகரித்துள்ளது. வேண்டுமென்றால், கூடுதலாக இன்னொரு வடிகட்டியையும் பயன்படுத்தலாம் என வாஷிங்டன் வடிகால் அமைப்பை நடந்திவரும் அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
வாஷிங்டன் வடிகால் அமைப்பு அந்தச் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறும் அளவைக் குறைத்துக்கொண்டு, அதன் தொடக்கமாக அனைத்துச் சுத்திகரிப்பு வசதிகளும் பெறும் வகையில் மெக்மில்லன் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாற்றியது.
ஆனாலும், போதுமான அளவுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை, குறிப்பாக தீ விபத்தின்போது தீயை அணைப்பதற்கு. அதனால், மீண்டும் டேலகார்லியா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மீண்டும் நீரை எடுத்தனர் வடிகால் அமைப்பின் அதிகாரிகள்.
இதில், “நீர் பயன்பாட்டுக்கு டேலகார்லியா சுத்திரிகரிப்பு நிலையத்திலிருந்து எடுக்க முடிவுசெய்யப்பட்டதும் ஒரு பகுதிதான். ஏனென்றால், விடுமுறை நாளான ஜூலை 4 அன்று அதிகபடியாக நீர் பயன்படுத்தப்படுவது தெரிகிறது. மேலும் இந்த அறிவிப்பு எப்போது விலக்கப்படும் எனத் தெளிவாகத் தெரியவில்லை” என்கிறார் லிஸ்லே.
வடக்கு வர்ஜீனியாவுக்கு நீரை விநியோகிக்கும் ஃபேர்ஃபாக்ஸ் எனும் நிறுவனம், கொதி நீரைக் குடிக்க வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால், அந்த நிறுவனம் வாஷிங்டன் வடிகால் அமைப்பிடமிருந்து தண்ணீர் வாங்குவதை முன்னதாகவே நிறுத்திவிட்டது.
தமிழில்: ச.ச.சிவசங்கர்
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.