கட்டுரை, கல்வி, புத்தகங்கள், ஆசிரியரிடமிருந்து... 3 நிமிட வாசிப்பு

எல்லாமே அவசரகதியில்... என்னா வாழ்க்கைடா இது!

ஆசிரியர்
07 Aug 2022, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

யில் 10 மணிக்கு என்றால், 9.55க்கு சமஸ் ஓடி வருவார் என்று நண்பர்கள் சொல்வார்கள். எப்போதும் 10 வேலைகளுக்கு மத்தியிலேயே சிக்குவதன் விளைவு என்று மட்டும் அதைக் குறுக்க முடியாது.

என்னுடைய நண்பர்கள் பலர் ஒழுக்கசீலர்கள்,  முன்னுதாரணர்கள். அதிலும் க்ரியா ராமகிருஷ்ணன், கே.சந்துரு போன்றவர்களைப் பார்க்கும்போது வெட்கமாகவே இருக்கும். காலையில் 8.30 மணிக்கு அலுவலகம் என்றால், 8.20-க்கு சாவியோடு வந்து அலுவலகம் திறப்பார்கள். கையில் உள்ள கூடையில் எனக்கும் சேர்த்து மதியவுணவு இருக்கும். 

நான் 9 மணிக்கு சந்திக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு 10 மணிக்குப் போய் நிற்பேன். சிரிப்பார்கள். 'எப்படா திருந்தப்போற?' என்று எவ்வளவு நாள்தான் என்னை நானே  கேட்டுக்கொண்டே இருப்பது?

சரி, திருந்துவோம் என்றாலும், காலம் விடுவதே இல்லை. "தமிழ்நாடே கொண்டாட வேண்டிய ஓர் ஆசிரிய மேதையை வரலாற்றிலிருந்து கொண்டுவருகிறோம்; அவசியம் புத்தக வெளியீட்டு விழா நடத்த வேண்டும்" என்றார்கள் நண்பர்கள். இரு வாரங்கள் முன்னதாகத் திட்டமிட்டு, ஆக.15 அன்று மன்னார்குடியில் செய்திடலாம் என்று சொல்லி ஆலோசனைக் கூட்டமெல்லாம் ஒரு வாரம் முன்னரே நடந்து முடிந்தது. திடீரென ஒரு யோசனை, மன்னார்குடி நண்பர்களுக்கு: 'இங்கே ஆக.15 நடப்பதுபோல நடக்கட்டும், இவ்வளவு பெரிய ஆளுமையை நாம் சென்னைக்கு அல்லவா முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்?'

இது எப்போது? முந்தைய நாள் இரவில். சுற்றுப்பயணம் சென்றிருந்தவன் அவசர அவசரமாகத் திரும்பி, நேற்று மாலை நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் சிறப்பு விருந்தினர்களையும் இறுதி செய்து, இன்று மாலை சென்னையில் நிகழ்ச்சி. நள்ளிரவு ஒரு பிழையை சரிசெய்து வடிவமைப்பாளர் நெகிழன் அழைப்பிதழை அனுப்பியபோது மணி 1.

இப்போது புரிந்திருக்கும் இவ்வளவு பெரிய கதையளப்புக்கான காரணமும். அதேதான். யாரையும் தனிப்பட்ட வகையில் அழைக்கவில்லை என்றோ, கடைசி நேரத்தில் செய்தியைப் பகிர்கிறேன் என்றோ நண்பர்கள் கோபிக்காதீர்கள். அவசியம் வந்து சேருங்கள். 

கல்வி மீது அக்கறையுள்ள ஒவ்வொருவருக்குமான நூல் இது. மிகச் சிறந்த ஒரு கல்வியாளுமை தொடர்பான நூல். கல்வியை மையப்படுத்தும் அரசியலுக்கு உண்மையான மாற்றை வரலாற்றிலிருந்து அறிமுகப்படுத்தும் நூல். உங்கள் ஒவ்வொருவரையும் வீட்டில் பிள்ளைகளோடு எதிர்பார்க்கிறேன். மிகச் சிறந்த கல்வியாளர்களின் உரையை அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். 

சென்னை, சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கில், இன்று மாலை 5 மணிக்கு நேரில், சந்திப்போம்...🙏❤️🙏

- சமஸ், முகநூல் பதிவு

 

நூலைப் பெறுவதற்கு அணுகவும்: 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


3





மகளிர் இடஒதுக்கீடு மசோதாவலி அறியாத் தமிழர்கள்உழவர்கள்யூதர்சுதந்திர தினம்தலைமைப் பண்புமைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடிஜெயமோகன்கள்ளக்குறிச்சி கலவரம்: காவல் துறையின் அம்மணம்மத்திய கிழக்கு நாடுகள்ஜனநாயகத் திருவிழாஒன்றிய அரசுக்கான சவால்கத்தோலிக்க திருச்சபைஇயம்வெளி மாநிலத்தவர்1232 கி.மீ.; ஏழு புலம்பெயர் தொழிலாளர்களின் ஏழு நாளபுஷ்பாஅம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?வலதுசாரிக் கொள்கைசம்ஸ்கிருத மந்திரம்டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?விஞ்ஞானிகள்அரசுத் துறைநமஸ்தே ராஜஸ்தான்சித்ரா பாலசுப்பிரமணியன்இயங்குதளம்நார்வேபிரேசில்வேலை இழப்பில் இருந்து மீள்வது எப்படி?சாத்தானிக் வெர்சஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!