கட்டுரை, கலாச்சாரம், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

பட்டாசு: பெரும்பான்மைவாதத்தின் பெருமிதம்

ஆசிரியர்
26 Oct 2022, 5:00 am
0

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

ந்த ஆண்டு தீபாவளிக்குப் பட்டாசுகளைக் கொளுத்துவதை ஒரு 'சுயமரியாதைப் போராட்டம்' ஆகக் கருதிச் செயல்பட்ட நண்பர்கள் எனக்கு உண்டு. அது ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்த அரசாக இருப்பினும் 'தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது' என்ற அரசின் குறுக்கீட்டைத் தனிநபர் உரிமைக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி இதை அவர்கள் செய்தனர். 

நான் தீபாவளி கொண்டாடுவது இல்லை. பொங்கல்காரன். அதேசமயம், தினமும் பிழைப்பின் பெயரால் செத்து செத்து வாழும் மக்கள் என்னென்ன பெயரால் விழாக்களைக் கொண்டாடினாலும் அது நல்ல விஷயம் என்று கருதுபவன்.

தனிப்பட்ட வகையில் 'தீபத் திருநாள்' என்ற பெயரில் பட்டாசுகளைக் கொளுத்துவதை வெறுக்கிறேன்.  உள்ளபடி அத்தகு பெருமைக்குரிய நாள் கார்த்திகை தீப நாள். பட்டாசு சத்தம் மீதான அதே விதமான அசூயை கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் எதுவாயினும் அவை ஸ்பீக்கர்களை  அலறவிடுவதில் உண்டு. மதத்தின் பெயரிலான பொது வன்முறை என்றே அதைக் கருதுகிறேன்.

இதையெல்லாம் நன்கு அறிந்த நண்பர் இன்று காலை அழைத்தார். "நேத்து தீபாவளி பட்டாசு சத்தம் வீட்டுக்குள்ள கேட்டுச்சா?" என்றார். அவரும் ஒரு 'பட்டாசுப் போராளி'. "நல்லாக் கேட்டுச்சு. இதோ காலையில செய்திலேயும் குப்பைகளைக்  காட்டுறாங்கபோல! வருஷாவருஷம் இதைப் பார்க்கிறோமே!" என்றேன். 

நண்பர் விடவில்லை. 

"அதை விடுங்க; பட்டாசு வெடிக்கும் தனிநபர் உரிமையை நிலைநிறுத்துதற்காகவே பட்டாசு வெடித்த இந்தப் போராட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார்.

"ஊருக்கு நடுவே இப்படி பட்டாசு வெடிப்பதைத் தனிநபர் உரிமையாக நான் நினைக்கவில்லை; ஆனால், நம் சமூகத்தில் பொதுவில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்றால் அதற்கான உரிமையை நான் மனதார மதிக்கிறேன். அதைக் காட்டிலும் இதற்காகக் கிளர்ந்தெழுந்த உங்கள் போராட்டவுணர்வை வெகுவாகப் பாராட்டுகிறேன். வெடிக்கும் பழக்கம் இல்லாத உங்களுக்கே சுற்றுச்சூழல் நிமித்தம் 'பட்டாசை வெடிக்கக் கூடாது' என்று யாரோ சொல்வது இவ்வளவு ஆத்திரம் ஊட்டினால், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் உணவு, உடை விஷயத்தில்,  "நீ கறி சாப்பிடாதே! புர்கா போடாதே!" என்றெல்லாம் தடை போடுவது எவ்வளவு அநீதியாக ஒருவரை  உணரவைக்கும் என்பதை இனியாவது உணர்வீர்கள் இல்லையா?" என்றேன். 

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், "அப்புறம் பேசுகிறேன்" என்று போனை வைத்துவிட்டார். யோசிப்பார் என்று நம்புவோம்.

எப்போதும் என்னைப் பெரும்பான்மையினக் கூட்டத்தில் ஒருவனாகவே உணர்கிறேன். அந்தத் தன்னிலை தரும் தார்மிக உணர்விலிருந்தே இதை எழுதுகிறேன். தயவுசெய்து இதை யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ ரம்ஜான், கிறிஸ்துமஸ் நாட்களில் ஒரு நாள் முழுக்க இந்த நாட்டில் இப்படிப் பட்டாசுகளைக் கொளுத்த முடியுமா? நம் வீட்டில் யாரேனும் ஒருவர் இப்படி குப்பை அள்ளுபவராக இருந்தால், இப்படி துளி லஜ்ஜை இன்றி பட்டவர்த்தனமாக இதைச் செய்வோமா? நண்பர்கள் யோசிக்க வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

3





தமிழ் வைணவர்கள்புதிய அரசுஆசிரியர் - மாணவர் பற்றாக்குறைஒற்றைச் சாளரமுறை3ஜி சேவைஅதிமுகவில் என்ன நடக்கிறதுபுத்தகம்ஐபிஎல்தேவேந்திர பட்நவிஸ்அசோகா: போர்ட்ரைட் ஆஃப் ஏ ஃபிலாஸபர் கிங்உடைமைகள்கடவுள் மறுப்புஸ்டேட்டிஸ்டிக்ஸ்அரசமைப்புச் சட்டத் திருத்தம்சிறுநீர்க் கடுப்புகதிர்வீச்சு சிகிச்சைபயன்பாடு மொழிதேசியப் பூங்காக்களும்ஆடுதொட்டிவேந்தர் பதவியில் முதல்வர்இரா.செழியன் கட்டுரைபுதிய தொழில்நுட்பம்மகாராஷ்டிரம்முரசொலிசிபிஎஸ்இமோகன் பாகவத்வலி அறியாத் தமிழர்கள்பூதம்பாடிதீண்டாமைகண்ணுக்கு ஒளி கொடுக்கும் கண் தானம்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!