வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில் 'ஆசிரியரிடமிருந்து' பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
காலையில் பத்திரிகையைப் பார்த்ததும் காண்டானது. நீட் தேர்வு தொடர்பான ஒரு செய்திதான் காரணம். "நடப்பாண்டுக்கான தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 162 கேள்விகள் தமிழகப் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளன. எனவே, நமது பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புப் பாடநூல்களை நன்றாகப் படித்தவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொண்டிருக்க முடியும்."(தி இந்து தமிழ், ஜூலை 20, 2022).
ஒவ்வொரு முறை நீட் தேர்வு முடியும்போதும் தமிழக ஊடகங்களில் - தமிழ், ஆங்கிலம் எல்லா தினசரிகளிலும்தான் - இத்தகு செய்தியைப் பார்க்க முடியும்.
உண்மை என்னவென்றால், 200 கேள்விகளைக் கொண்ட நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 162 கேள்விகள்தான் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அதாவது, மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் ஒரு குழந்தை முழுமையாக தன்னுடைய புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும்கூட மிச்சம் 38 கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியாது; ஏனென்றால், அவை தேசிய பாடத்திட்டத்திலிருந்து - கேட்கப்படுபவை.
ஒரு மாணவர் 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் (20 கேள்விகள் சாய்ஸ்); சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 மதிப்பெண்கள்; தவறான பதில் அளித்தால் நெகடிவ் மதிப்பெண்.
மேற்கண்ட செய்தியின்படி 162 கேள்விகள் தமிழக அரசுப் பாடநூல்களிலிருந்து வந்திருக்கின்றன எனக் கொண்டால்கூட ஒரு சிபிஎஸ்இ மாணவர் 720 மதிப்பெண்களுக்குப் பதில் எழுதுகிறார்; மாநிலக் கல்வி வாரிய மாணவருக்கோ தேர்வே 648 மதிப்பெண்களுக்குத்தான் நடத்தப்படுகிறது. அதாவது பரிட்சை எழுதும் முன்னரே 10% மதிப்பெண்களும், கூடவே 20 சாய்ஸ் கேள்விகளும் காலி. நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளில் ஒரு மதிப்பெண்கூட முக்கியமானது என்ற சூழலில், இரு தரப்பு மாணவர்கள் இடையே இது எவ்வளவு அப்பட்டமான பாகுபாடு, அநீதி?
¶
2018இல் தமிழக அரசு புதிய பாடநூல்களைக் கொண்டுவந்ததும், அவை நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதும் நல்ல விஷயம். ஆனால், நீட் தேர்வை இந்தப் புத்தகங்களைக் கொண்டு மட்டும் எதிர்கொண்டுவிட முடியாது. அக்கிரமமான அத்தேர்வை எதன் வழியும் நியாயப்படுத்தவும் முடியாது.
ஒரு தகவலை அரசோ, தனியார் நிறுவனங்களோ ஊடகங்களுக்கு வழங்கும்போது அவரவர் முன்னுரிமையின்படி வழங்கலாம். அது வெறும் தகவல்தான்.
இப்படி வழங்கப்படும் தகவலிலிருந்து சமூகத்துக்கு அது உள்ளடக்கியிருக்கும் உண்மையான செய்தியை வெளிப்படுத்த வேண்டியதுதான் ஊடகர்களின் - ஊடகங்களின் வேலை. அப்படியென்றால் இந்தச் செய்தி எப்படி வெளியிடப்பட்டிருக்க வேண்டும்?
இப்போது கீழேயுள்ள செய்தியையும், அது வழங்கப்பட்டிருக்கும் தொனியையும் வாசியுங்கள். செய்தியின் லட்சணம் புரியவரும்!
1
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
ப.சுவாமிநாதன் 2 years ago
இதே தலைப்பு அருஞ்சொல் இணைய பதிப்புக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன். நாளிதழ்களில் வந்த செய்தி எதையோ மக்களிடம் மறைத்து உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை பதிவிட்டுவிட்டது போலும் அதனுடைய உண்மைத்தன்மையை தாங்கள் சுட்டிக்காட்டி மற்ற ஊடகங்கள் செய்யத்தவறியதை நாங்கள் வெளிகொண்டுவந்ததுபோல எழுதப்பட்ட கட்டுரையை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனெனில் அந்த செய்தியுனுடைய சாராம்சம் அதாவது மாநில பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் இத்தனை கேள்விகளுக்கு பதிலளித்திருக்கமுடியும் என்பதுதான். அந்த மாநில பாடத்திட்டம் மற்ற பாடத்திட்டம் போல் மாற்றிஅமைக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அதை கருதவேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்விதமாகத்தான் அந்த செய்தியை கடந்து செல்லவேண்டும். அப்படியில்லாமல் இந்த செய்தியை பகுத்து ஆராய்ந்து ஏதோ புதிதாக கண்டுபிடித்து அறிவித்ததுபோல் ஒரு கட்டுரையை எழுதிருக்கவேண்டிய அவசியமில்லை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
விஷ்வ துளசி.சி.வி 2 years ago
NEETE EXAM is spoiling many students career GROWTH & ASPIRATION. Students wasting 3 to 4 years & more for NEET. PARENTS MUST have spent HUGE MONEY. Strong reforms needed in Medical admissions process.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.