ஆரோக்கியம், இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு

கொலஸ்டிரால்: உங்கள் நண்பனா? எதிரியா?: ஓர் எதிர்வினை

வாசகர்
14 Jul 2024, 5:00 am
0

மிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

தனது எளிமையான எழுத்து நடை மூலம் தமிழ்ச் சமூகத்தில் தனக்கெனப் பிரத்யேக வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர் டாக்டர் கு.கணேசன். மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை விளக்குவதுடன், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவம் பற்றிய அடிப்படை அறிவைப் புகட்டுவதும் இவர் எழுத்தின் தனிச் சிறப்பு ஆகும். டாக்டர் கு.கணேசன் எழுதி 07.07.2024 அன்று ‘அருஞ்சொல்’ இதழில் ‘கொலஸ்டிரால்: உங்கள் நண்பனா? எதிரியா?’ எனும் கட்டுரை வெளியானது. பரவலாக வாசிக்கப்பட்ட அந்தக் கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.

ஞாயிறுதோறும் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகும் டாக்டர் கு.கணேசன் எழுதும் கட்டுரைகள் அபாரமானவை. அந்த வகையில் 07.07.2024 அன்று வெளியான ‘கொலஸ்டிரால்: உங்கள் நண்பனா? எதிரியா?’ எனும் கட்டுரை அட்டகாசம்! 

என்னைப் படி என்று ஈர்க்கும் எழுத்து. வடிவேலுவை உதாரணமாக்கி, வாசகர் தோள் மேல் கை போட்டு, அவர் பிரச்சினையை அப்படியே பிட்டுவைத்ததும் அவர் கண்ணெல்லாம் கலங்கி, நீங்கள் சொல்வதை உள்வாங்க ஆரம்பித்துவிடுவார். எளிமையாகவும் சுவையாகவும் அறிவைப் புகட்டி, இவ்வளவுதான் விஷயம், புரிந்ததா? இனி உங்கள் சமர்த்து என்று நீங்கள் முடிக்கும்போது படிப்பவருக்குத் தெளிவு பிறந்திருக்கும். அவர் பார்வையில் உங்களுக்கான நன்றி இருக்கும். 

“நம் உடல் கார்போஹைட்ரேட்டைத் தயாரிப்பதில்லை; புரோட்டீனைத் தயாரிப்பதில்லை. ஆனால், கொலஸ்டிராலை மட்டும் தயாரித்துக்கொள்கிறது. அப்படியானால், நமக்குத் தேவையான ஒரு ‘விஐபி’யாகத்தானே அது இருக்க வேண்டும்?” என ஆசிரியர் விவரிக்கும்போது, சட்டென என் மூளைக்குள் பல்பு எரிகிறது! 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?

கு.கணேசன் 07 Jul 2024

நம் உடலுக்குக் கொலஸ்டிரால் எந்தெந்த வகைகளில் அவசியம் எனச் சொல்லியிருப்பது அருமையான தகவல். இதுவரை வெகுஜனக் கட்டுரைகளில் வேறு எவரும் இதைச் சொன்னதில்லை, இதுவே பலரின் பயத்தைத் தெளியச் செய்யும். அதேபோல் மாமிசத்தில் உள்ள கொழுப்பைவிட வறுத்த, பொறித்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் கொழுப்பு அதிகம் என்ற தகவல் மிகவும் முக்கியமானது. 

‘அருஞ்சொல்’லில் வெளியாகும் உங்கள் கட்டுரைகளை சிறிது காலம் கழித்து ‘குமுதம்’ போன்ற அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளில் வெளியிட்டால் இன்னும் பல பேர் படிப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவ்வளவு அவசியமானவை உங்கள் கட்டுரைகள். 

நன்றி ஐயா! 

-டாக்டர். வித்யா சங்கரி, ஆத்தூர்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?
புரதப் புதையலும் கொழுப்புக் குவியலும்!
உங்கள் ஆரோக்கிய பிளேட்டில் என்ன இருக்க வேண்டும்?
நடைப் பயிற்சி எனும் அற்புதம்
உடல் பருமனைக் குறைக்க முதல் வழி
உடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்
கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?
ஒல்லியாக இருப்பது ஏன்?
கார்போவுக்கு குட்பை!
எகிறும் உடல் எடை : என்ன காரணம்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






நர்த்தகி நடராஜ்ஹண்டே அருஞ்சொல் பேட்டிவ.சேதுராமன் கட்டுரைமதச்சார்பற்ற அரசாங்கம்நரம்புநலம்சமஸ் - ட்ராட்ஸ்கி மருதுமைய நிலத்தில் ஒரு பயணம்சங்கிகள்writersamasநயன்தாரா விக்னேஷ் சிவன்பார்க்கின்சன் நோய்பிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிபதப்படுத்தும் தொழிற்சாலைகள்முதலீட்டாளர்கள்இதழியல்கோல்வால்கர்ஊரகப் பொருளாதாரம்கெட்டதுநவீன மருத்துவம்தொழிலாளர் நலம்ஆசிரியர்கள் நியமனம்கையூட்டுபெருங்குழப்பம்ராஜுஅமுல் மேலாண் இயக்குநர் சோதி ஓய்வுபெறுகிறார்!உதயநிதிபற்றாக்குறையோகியை வீழ்த்துவாரா அகிலேஷ்?வி.பி.மேனன்எம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!