கட்டுரை, கல்வி, ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு
பள்ளிக்கல்வித் துறையின் அதீதத் தலையீடுகள் ஆபத்து
வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
பள்ளிக்கூடங்கள் தூய்மைப்பணியில் எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியென்றால் இது அபத்தம்.
இத்தகைய 'மைக்ரோ மேனஜ்மென்ட்' வேலையைத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை கையோடு கைவிட வேண்டும். அதீதமான 'அரசியல் சரித்தன்மை' நம்முடைய பள்ளிக்கல்வித் துறையை ஆட்டிப்படைக்கிறது என்று எண்ணுகிறேன். நல்ல எண்ணம் என்றாலும், இது சரியல்ல.
¶
வீடுகள் எப்படிக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டுமோ, அப்படியே பள்ளிக்கூடங்களும் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கூடம் என்பது அடிப்படையில், ஆசிரியர் - மாணவர் இடையிலான பந்தம். இப்படியான அறிவிப்புகளும் அறிவுறுத்தல்களுமான அணுகுமுறையானது தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை முற்றிலும் அதிகாரமற்றவர்களாக ஆக்கிவிடும். இன்றைய அரசுப் பள்ளிக்கூடங்கள் கோரும் மிக அவசிய மாற்றம், ஆசிரியர்களை அதிகாரப்படுத்துவது. அதன் வழியே அவர்களைப் பொறுப்புக்குள்ளாக்குவது.
பள்ளிக்கூடங்களின் சுயாதீனச் செயல்பாடும், ஆசிரியர்களின் அதிகாரமும் கூட்டாட்சியின் முக்கியமான அங்கம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
- சமஸ், முகநூல் பதிவு
4
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
rajasekaranthirumalaisamy 2 years ago
நூறு நாள் வேலை என்பது கிராம ஊராட்சி பகுதிகளில் மட்டுமே உள்ளது..பேரூராட்சி நகராட்சி போன்ற நகர் புற உள்ளாட்சிகளில் இல்லை..பள்ளிகளில் கடை நிலை ஊழியர் இரவு காவலர் தூய்மைப் பணியாளர் என எந்த முழு நேர /பகுதி நேர ஊழியர்கள் இல்லை.. மாணவர்களை ஆசிரியர்கள் எந்த விதத்திலும் எதையும் செய்ய வைக்கக் கூடாதெனில் அவர்கள் தங்களது சுய தேவைகளை எங்கு போய் கற்க முடியும்..?தேவையில்லாத அறிவிப்புக்களை பத்திரிக்கைகளில் வெளியிடுவதை தவிர்த்து நிர்வாகம் மூலம் சுற்றறிக்கைகளாக தருவது சற்று கண்ணியமாக இருக்கும்..கல்வித்துறை பலவிதங்களில் களவானி துறையாக மாறுகிறது..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
There was an incident reported in the Press that a Dalit student in a Tamil Nadu school was asked to remove faeces of a non-Dalit student from the classroom. What prevented from asking the non-Dalit student to remove his own stool? There have been many incidents that Dalit students were asked to clean toilets. As long as this casteist mentality is prevailing in the minds of teachers, there is nothing wrong in government coming forward to ban entrusting sanitary works to students.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.