1 நிமிட வாசிப்பு

அமைச்சர்களா, ஆண்டைகளா?

ஆசிரியர்
25 Sep 2022, 5:00 am
2

 

வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.

இளைய தலைமுறையினருக்கு, திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாற்றைச் சொல்லும் பயிலரங்குகளை நடத்துகிறது திமுக தலைமை. கூடவே அமைச்சர்கள் முதலாக கட்சியின் வட்டச் செயலர் வரையிலான நிர்வாகிகளுக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் பண்பாட்டைச் சொல்லும் பயிலரங்குகளையும் நடத்துவது காலக் கட்டாயம் என்பதையே தமிழக அமைச்சர்கள் / மக்கள் பிரதிநிதிகள் சிலருடைய நடத்தைகள் உணர்த்துகின்றன.

தான் டாம்பீகமாக அமர்ந்தபடி தன்னைச் சந்திக்க வந்த பழங்குடி சமூகப் பிரதிநிதியை நிற்க வைத்துப் பேசும் அமைச்சர் ஒருவரின் புகைப்படமும், அரசு அளிக்கும் மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை 'ஓசி' என்று விவரிக்கும் அமைச்சர் ஒருவரின் காணொளியும் அப்பட்டமான ஆண்டைத்தனம்தான். சென்னை மேயரைப் பலர் முன்னிலையில் ஓர் அமைச்சர் அதட்டியதையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எங்கோ ஒருவர், ஏதோ ஒரு முறை என்று இப்படி வெளிப்படவில்லை என்பதைத் திமுக தலைமை கவனிக்க வேண்டும். மேற்படி விஷயங்களிலேயே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பொன்முடி, நேரு ஆகியோர் முதல் முறையாக இப்படி சர்ச்சையில் அடிபட இல்லை. அப்படியென்றால், இது எதை வெளிப்படுத்துகிறது? கட்சிக்குள்ளேயே இது புரையோடிவிட்டிருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது.

அதிலும், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கல்வித் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். சித்தாந்த அடிப்படைகள் அறிந்தவர். திராவிட இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். இன்றைக்கு ஆளுநருடன் கல்வித் துறை சார்ந்து முக்கியமான அரசியல் மோதலில் ஈடுபட்டிருப்பவர். அப்படிப்பட்டவரிடமே ஒரு பொதுக்கூட்டத்தில் இத்தகு சொல்மொழியும், உடல்மொழியும் வெளிப்படுகிறது என்றால், கீழே இத்தகு பின்னணி எல்லாம் இல்லாத ஒருவர் எப்படியெல்லாம் நடந்துகொள்ளலாம் என்பதைத் திமுக தலைமை எண்ணிப் பார்க்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டும்; வெளிப்படையாக கட்சியினருக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் மாறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயமரியாதை என்பது சக மனிதருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் மூலமாகவே பிறக்கிறது!

-சமஸ், முகநூல் பதிவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

5

1

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Pragathish. K   2 years ago

Leaders of DMK should be first be made aware of Dravidian principles. And Mr. M. K. Stalin must take a open or secret action on it by advising his ministers on how their actions should be

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Abi   2 years ago

Strong opposition is not there, so they can do /speak whatever they think..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பயிர்ச் சுழற்சிஊழல்காரர்ஆர்தடாக்ஸிஅமெரிக்கை நாராயணர்களே!கடவுளும் அவருடைய செய்தியும்இரண்டு வயதுமாநிலங்களவையின் சிறப்புகேசவானந்த பாரதிகுலாப் சிங்கலப்பு மொழிஅணையின் ஆயுள்ஸ்டாலின் ராஜாங்கம்ஆ.ராசாகாடுகள்பொதுப் பட்டியல்விரித்தலும் சுருக்குதலும்நடராஜன் ரங்கராஜன் கட்டுரைபூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்முத்தலாக் தடை சட்டம்சுரங்கப்பாதைகள்ஹீமோகுளோபின்தொடரும் சித்திரவதைராஜஸ்தான்: நீ அல்லது நான் ஆட்டம்ஐந்து மாநிலத் தேர்தல்கல்விச் சீர்திருத்தம்கேம்பிரிட்ஜ் சமரசம்ஆசிரியர் - மாணவர் பற்றாக்குறைபாராமதிஜாதிய படிநிலைகாட்சி ஊடகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!