கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 4 நிமிட வாசிப்பு
காங்கிரஸ், பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறு
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, ஆட்சியில் இருக்கும் கட்சி, இருந்த கட்சி ஆகியவற்றின் பொருளாதார – அரசியல் செயல்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். அரசியல் செயல்களைப் பொருத்து 2024 தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போது தெரியவில்லை.
ஆயினும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்டிஏ) மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு (2004-2013) ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடலாம்.
இந்தியாவும் சீனமும் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரையில் உலக நடப்புகளால் அதிகம் பாதிக்கப்படாமல் தனித் தீவுகளாகவே செயல்படுகின்றன. 1991இல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் அவற்றைத் தொய்வடையாமல் பின்பற்றுகின்றன (ஆனால், சிலவற்றில் முக்கிய தோல்விகளையும் சந்தித்துள்ளன).
இந்தியாவிலும் சீனத்திலும் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பொதுவான விளைவு என்னவென்றால், இரு நாடுகளின் பொருளாதாரமும் உலகின் பிற நாடுகளுடன் இணைப்பைப் பெற்றுள்ளன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சீர்திருத்தங்களும் விளைவுகளும்
வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட அரசுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளை ஒப்பிடத்தான் வேண்டுமா? அப்படிச் செய்ய வேண்டும் என்றால் வெவ்வேறு காலகட்டங்களில் நிலவிய ஜிடிபி எவ்வளவு என்று ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்கும். இந்த அணுகுமுறையானது இரண்டு காலங்களிலும் வளர்ச்சி சமமாகவே இருந்தது, புறச் சூழல்களும் அப்படியே தொடர்ந்தன என்ற அனுமானத்தில்தான் இருக்க முடியும்.
ஆனால், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களிலும் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கக்கூடிய புறக் காரணிகளை அறவே கருத்தில் கொள்ளாமல் அல்லது அவற்றின் தாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஒப்பிடுவது சரியல்ல. ‘உலகமயம்’ என்பதை ஏற்ற பிறகு, உலக அரங்கில் ஏற்படும் பொருளாதார ஏற்ற - இறக்கங்கள் (குறிப்பாக மந்தநிலை) அத்துடன் இணைந்த நாடுகளிலும் நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும்.
இன்னொரு ஒப்பீட்டு முறை, எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு வாய்ப்பு இருந்தது என்று கணக்கிடும் முறை. இது உலக அளவிலான வணிக சுழற்சியில் நம்முடைய பொருளாதாரம் நேர்மறையாக வளர்கிறதா, எதிர்மறையாக செல்கிறதா (வீழ்ச்சி) என்பதை அறிய உதவும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் நீண்ட கால விளைவுகளும் இந்த வளர்ச்சி வீதங்களில் நிச்சயம் எதிரொலிக்கும். பொருளாதாரம் கண்டிருக்கக்கூடிய வளர்ச்சியை எப்படிக் கணிப்பது, அது புறச் சூழல்களுடன் நெருக்கமான தொடர்புடையதா?
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
13 Nov 2023
இந்த விவாதத்தில் இது முக்கியமான கேள்வி, காரணம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். சில பொருளாதார ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக இதை மிகவும் சாதாரணமாகச் செய்கிறார்கள். புறச் சூழல்களையும் அதன் விளைவுகளையும் ஒதுக்கிவிட்டு வளர்ச்சி வீதத்தை மட்டும் ஒப்பிடுவது முறையான ஆய்வு அல்ல. பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் அரசின் கொள்கை முடிவுகளைப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட ஒப்பீடு உதவாது.
‘உபரி வளர்ச்சி’ – உதவக்கூடும்
இருவேறு காலகட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட நாம் இரண்டு வரிகளில் எளிமையான கணக்கைச் சொல்கிறோம். முதல் வரி, குறிப்பிட்ட ஓராண்டில் இந்தியாவைத் தவிர பிற நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி எவ்வளவு என்பதை அந்தந்த நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒரு மதிப்பு போட்டு கணக்கிட வேண்டும். இது அந்த ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி வீதம் எவ்வளவு என்று காட்டும். இது ஒப்பீட்டுக்கு ஒரு அடையாள மதிப்பாகத் திகழும்.
அடுத்த வரி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீத அளவிலிருந்து உலக சராசரி வளர்ச்சி வீத அளவைக் கழிக்க வேண்டும். இதன் மூலம் இந்திய வளர்ச்சி எவ்வளவு உபரியாக (அதிகமாக) இருக்கிறது என்று தெரிந்துவிடும். வெவ்வேறு காலகட்டங்களில் இருவேறு அரசுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் அவற்றின் கொள்கைகளுக்கு ஏற்ப எவ்வளவு உயர்ந்தது என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டுவிடலாம். எந்த ஆட்சியில் இது அதிகமாக இருந்ததோ அது நன்றாகச் செயல்பட்டது என்ற முடிவுக்கும் வரலாம்.
வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇 75500 09565பொக்கிஷம் இந்த நூல்
- தினத்தந்தி
சோழர்கள் இன்று
2014-23 காலத்தில்தான் மேம்பாடு
இந்த ஒப்பீட்டுக்கு முன்னதாக ஓர் எச்சரிக்கையும் அவசியப்படுகிறது. 2004-13 காலத்திலும் 2014-23 காலத்திலும் உலக அளவில் இரண்டு வெவ்வேறு காரணங்களால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசுக் காலத்தில் ‘உலக நிதித் துறையில் பெரிய நெருக்கடி’ ஏற்பட்டது. பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் ‘கோவிட்-19’ பெருந்தொற்று ஏற்பட்டது. பலர் இந்த இரண்டையும் சமமாகவே கருதி ஒப்பிடுகிறார்கள், அது சிக்கலானது.
2007-08 காலத்தில் நிலவிய நிதித் துறையில் மட்டும் நிலவிய நெருக்கடியைவிட, 2020-21 பெருந்தொற்று நெருக்கடி மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எல்லா நாடுகளிலும் விவசாயம் தவிர பிற துறைகளில் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றையே நிறுத்த நேர்ந்தது. மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தார்கள். மருத்துவத் துறைக்கு பெரிய பணிச்சுமை ஏற்பட்டது. ‘பொது முடக்கம்’ என்ற புதிய நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.
இருந்தும்கூட, இரண்டையும் ஒப்பிடுவதற்காக இருவேறு காலகட்டங்களில் இருவேறு ஆண்டுகளின் வளர்ச்சி வீதம் நீக்கப்பட்டது. அந்த ஆண்டுகளைச் சேர்த்தாலும் முக்கிய முடிவில் மாற்றம் வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது: 2004-13 காலத்துடன் ஒப்பிடுகையில் 2014-23 காலத்தில் அரசின் பொருளாதாரச் செயல்பாடு மேம்பட்டிருக்கிறது.
சாதாரணமாக ஒப்பிட்டால் 2004-13 காலத்திய வளர்ச்சி 7.8% ஆகவும் 2014-23 கால வளர்ச்சி 6.9% ஆகவும் இருக்கிறது. ஆனால் பாஜக காலகட்டத்தில் உலக அளவில் சராசரி பொருளாதார வளர்ச்சி 4%, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 5.6%. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித் துறையில் மட்டும்தான் உலக அளவில் நெருக்கடி ஏற்பட்டது.
பாஜக ஆட்சிக் காலத்தில் ‘கோவிட்-19’ காரணமாக அனைத்துத் துறைகளுமே நிலைகுத்தி நிற்கும் அளவுக்கு புறச் சூழல் இருந்தது. இரு வெவ்வேறு காலகட்ட அரசுகளின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை ஒப்பிடும்போது, புறச் சூழ்நிலைகளைக் கணக்கில் எடுப்பதுடன், அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் விமர்சகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
தொடர்புடைய கட்டுரைகள்
சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு
துயர நிலையில் பொருளாதாரம், தொடர்ந்து மறுக்கும் அரசாங்கம்
7.5% ஜிடிபி வளர்ச்சி முடியுமா, முடியாதா?
ஜிடிபி சொல்வது என்ன, மறைப்பது என்ன?
தமிழில்: வ.ரங்காசாரி
5
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.