கேரளர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மைதான்
@ டெல்லி பல்கலைக்கழகம் வெளிப்படுத்தும் அபாயகரமான பிரச்சினை
ராகேஷ் பாண்டே சொல்வது அதிர்ச்சியாக பார்வைக்குத் தெரியலாம். ஆனால், இதில் இடதுசாரி - சிறுபான்மையினர் மீதான வெறுப்பைக் கக்கும் கோணத்துக்கு அப்பாற்பட்டு, மதிப்பெண்களை அள்ளிப்போடும் குற்றச்சாட்டானது, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கேரளப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பிற வகையான கல்வி நிறுவனங்கள் மீது இருந்துவருகிறது. அப்போது சங்க பரிவாரமோ, ராகேஷ் பாண்டேக்களோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். 1990-களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலத்தில் 55 சதவிகித மதிப்பெண்கள் எடுப்பது என்பது கிட்டத்தட்ட முடியவே முடியாத காரியம். ஆனால், கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதே படிப்பில் 80%-85% மதிப்பெண்கள் பெற்று பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்புகளின் பெருவாரியான இடங்களை கேரள மாணவர்கள் பிடித்துக்கொள்வார்கள். ராகேஷ் பாண்டே சொல்வது நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவரின் கூற்றில் உண்மையின் நிழல் படிந்திருக்கிறதா என்று பக்கச்சார்பு இன்றி தெரிந்துகொள்வது அவசியம்.
-பிரபு
வன்முறை என்று ‘அருஞ்சொல்’லும் தலைப்பிடலாமா?
@ அயோக்கியத்தனமானது லக்கிம்பூர் கெரி வன்முறை
இந்திய ஊடகங்கள் சமகால ஜாலியன்வாலாபாக் சம்பவம் - லக்கிம்பூர் கெரி சம்பவத்தைத்தான் குறிப்பிடுகிறேன் - தொடர்பில் மிக சாமர்த்தியமாக, ‘வன்முறை’ என்று பொதுவாகத் தலைப்பிட்டே அரசின் திசைத்திருப்பல் முயற்சிக்கு ஆதரவளித்துவருகின்றன. உங்கள் தலையங்கத்தின் தலைப்பும்கூட லகிம்பூர் கெரி வன்முறை என்றே உள்ளது. வன்முறை, கலவரம் எனில் இரு தரப்புகளும் மோதிக்கொண்டது என்றே தடம் புரளும். யார் நிகழ்த்திய வன்முறை என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும் அல்லவா? பொதுவாகச் சொல்லி தாக்கியவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் நிறுத்துவது என்ன நியாயம்? ஓராண்டை நெருங்கும் போராட்டத்தில் சோர்ந்துபோனது விவசாயிகள் அல்ல; அரசுதான் என்பதற்கு அவர்கள் நிகழ்த்திய இந்த வெறியாட்டமே சாட்சி. ‘அருஞ்சொல்’ அறம் உரைத்திருக்கிறது அழுத்தமாக.
- வெ. நீலகண்டன், கடலூர்
நல்ல கட்டுரைக்கு வணக்கங்கள்
@ எப்படி இருக்கிறது வங்கத்து அரசியல்?
வங்க அரசியல் களத்தில், தேர்தலுக்குப் பிறகான சூழல் குறித்தும், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக அளிக்கப்பட்ட இந்தக் கட்டுரைக்கு வணக்கங்கள்.
- எஸ்.மாதேஸ்வரன்
வள்ளலாரை அறிந்துகொண்டென்
@ அணையா நெருப்பின் ஒன்றரை நூற்றாண்டுகள்
இந்தக் கட்டுரையால் வள்ளலாரை அறிந்துகொண்டேன்; தருமத்தை அறிந்துகொண்டேன்; நன்றி சமஸ் அவர்களே!
- எஸ்.வடிவேல்
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.