கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

எருமைகள் மீது வாரிசுரிமை வரி!

ப.சிதம்பரம்
20 May 2024, 5:00 am
0

ந்த மக்களவை பொதுத் தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்படும் பிரச்சினைதான் என்ன? ஒரு அணியில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய சில தோழைக் கட்சியினரும் உள்ளனர்; இன்னொருபுறம் ராகுல் காந்தி தலைமையில் மிகவும் ஆற்றல்வாய்ந்த - அவரவர் மாநிலங்களில் சுதந்திரமாகச் செயல்படும் - மாநிலக் கட்சிகளின் தளகர்த்தர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

ராகுலின் தலைமையில் உள்ள தளகர்த்தர்கள் ஒவ்வொருவரும் மக்களுடைய வாழ்வாதாரம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர் – வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மத அடிப்படையிலான பிளவு, சமத்துவமற்ற சமுதாய நிலை, அரசின் சட்டங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி அரசின் விசாரணை முகமைகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசின் போக்கு, மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, இந்திய நிலத்தைச் சீனப் படை ஆக்கிரமித்திருக்கும் அவலம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் கடைப்பிடிக்கப்படும் ஒரு சார்புநிலை, செய்தி ஊடகங்களை அடிபணிய வைத்திருக்கும் அடக்குமுறை ஆகியவை குறித்து அவர்கள் பேசுகின்றனர். 

இவையெல்லாம் அரசியல் விவாதங்களை திசைத் திருப்பும் உத்தி என்று பதில் சொல்லாமல், ‘எருதுகள் மீதுகூட வாரிசுரிமை வரியை விதிப்பார்கள்’ என்று பதிலுக்குப் புதிய கதையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார் மோடி. அவருடைய வாழ்நாள் முழுக்க செய்த ‘அரசியல் ஆய்வின் விளை’வாக இந்த அற்புதமான கருத்தைக் கண்டுபிடித்திருப்பார் என்றே கருதுகிறேன். அவர் எழுப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் இப்போது விவாதம் நடக்கிறது! ஒன்றிய நிதி அமைச்சர், எருதுகளுக்கு எதிர்காலத்தில் வாரிசுரிமை வரி விதிப்பாரா என்ற கேள்வியே இப்போது முன் நிற்கிறது. இந்த விவாதத்துக்கு என்னால் முடிந்த வகையில் சுவையைக்கூட்டப் பார்க்கிறேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிராணிகள் மீது வரி

பிராணிகள் மீது இப்படி வரி விதிக்க அரசமைப்புச் சட்டம் அனுமதி தருகிறதா என்ற அடிப்படையான கேள்வி முதலில் எழும். அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியலில் 58 விஷயங்கள் இடம்பெற்றுள்ளன; பிராணிகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ளது என்று ‘முதல் நோக்கில்’ (Prima facie) அந்தப் பிரிவு தெரிவிக்கிறது.

ஆனால் ஒன்றிய அரசு, முதல் பட்டியலில் உள்ள 86, 87, 88 பிரிவுகளின்படி ஒன்றிய அரசுக்கு அந்த அதிகாரமும் இருக்கிறது என்று வாதிடக்கூடும்; அந்தப் பிரிவுகள் மூலதன ஆதாயம் தரும் சொத்துகள் (வீடு, மனை, நகை, பங்கு பத்திரம் போன்றவை) மீதான வரி (Capital Gains Tax), வாரிசு என்ற வகையில் பெறும் சொத்துகளுக்காக செலுத்த வேண்டிய வரி (Succession Tax), அல்லது செல்வந்தர் ஒருவரின் இறப்புக்குப் பிறகு அவரது உயில் அல்லது வேறு வகையில் அந்தச் சொத்துகளை அடைகிறவர் செலுத்த வேண்டிய வரி (Estate Duty) தொடர்பானவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?

ப.சிதம்பரம் 13 May 2024

சட்டத் துறை நிபுணர்களின் மொழியியலானது எருதை எப்படிக் கருதுவது ஒரு பிராணியாகவா, உடமையாகவா, வாரிசாகவா என்று பல கேள்விகளை எழுப்பிவிடும். எருது அல்லது எருமை என்பது பிராணிதானே, அது ஒருவரால் வாங்கப்படுவதால் அது அவருடைய உடமையாகிவிடுமா, வாங்கியவர் இறந்துவிட்டால் அடுத்தவருக்கு அது வாரிசுரிமை அடிப்படையில் தரப்பட வேண்டுமா என்கிற ரசமான கேள்விகள் கிளம்பிவிடும்.

இது தொடர்பாக சட்ட விளக்கம் தர, அரசமைப்புச் சட்ட அமர்வை நியமித்து உதவுமாறு உச்ச நீதிமன்றத்தைக் குடியரசுத் தலைவர் கேட்கும் நிலைகூட ஏற்படும்! அரசமைப்புச் சட்டத்தில் வல்ல மூத்த வழக்கறிஞர்கள் ‘மாடாக உழைத்து’ இவற்றுக்கான விளக்கங்களைத் தரும் நிலை ஏற்பட்டுவிடும்.

வரிக்கான அடிப்படை

எருதுகள் மீது வாரிசுரிமை வரி என்ற கருத்தைச் சொன்னவர் (பிரதமர் மோடி), ‘உங்களிடம் இரண்டு எருதுகள் இருந்தால், அதில் ஒன்றை அரசாங்கம் எடுத்துக்கொண்டுவிடும்’ என்றார்; அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட எருதுகள் இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள், அந்த வரி விகிதம் 50% ஆக இருக்கும் என்று உணர்த்தியிருக்கிறார்.

அவர் கூறியபடி இந்த வரிவிதிப்பை அமல்செய்வது சுலபமில்லை என்று அஞ்சுகிறேன். இரண்டு எருதுகள் இருந்தாலுமே அதில் எந்த எருதை வரிவிதிப்பு அதிகாரி எடுத்துச் செல்வார்? இரண்டு எருதுமே ஒரே நிறமாகவும் பாலினமாகவும் இருந்தால் அதில் ஒன்றை எடுத்துக்கொள்வதில் வரி அதிகாரிக்குப் பிரச்சினைகள் இருக்காது.

புரிடான் கழுதை: (பசி – தாகம் இரண்டாலும் பாதிக்கப்படும் ஒரு கழுதை ஒருபக்கம் தீனி – இன்னொரு பக்கம் தண்ணீர் இருந்தால் முதலில் எதை நோக்கிச் செல்லும், எதைக் கைவிடும் அதனால் அதற்கு என்ன நேரும் என்று பிரெஞ்சு அறிஞர் ஜீன் புரிடான் நகைச்சுவையாக ஒரு கற்பனையைச் செய்தார். அந்தக் கழுதை அருகிலிருந்த ஒன்றைத் தேர்வுசெய்து, இன்னொன்றைத் தொடுவதற்குள் இறந்துவிடுகிறது; அந்தக் கற்பனையில் கழுதை பேசப்பட்டது, இங்கோ நாம் எருதைப் பற்றிப் பேசுகிறோம்).

எருதுகள் இயற்கையாகவே நான்கு வண்ணங்களில்தான் பெரும்பாலும் இருக்கின்றன. சாம்பல், கறுப்பு, வெண்மை, அல்லது பழுப்பு. ஒருவரிடம் கறுப்பாகவும் வெள்ளையாகவும் இரண்டு எருதுகள் இருந்தால் அதிகாரி எதை எடுத்துச் செல்வார்?

வரி அதிகாரி பாலினப் பாகுபாடு காட்டினார், நிற வெறியை வெளிப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழாமல் இருக்க, இரண்டு நிறங்களில் எருதுகள் இருந்தால் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிகளை, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இரட்டைப் படை எண்ணிக்கையில் இல்லாமல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிராணிகள் இருந்தால், 50% வரி என்பதை எப்படி அமல்செய்வது? ஏதாவது ஒரு பிராணியை வெட்டி இரண்டாக்கினால் அது பிராணிகள் வதைச் சட்டப்படி குற்றமாகிவிடாதா?

வரி விகிதம் சரியா?

இந்த யோசனையைத் தெரிவித்தவர் 50% வரி என்கிறார். இந்த வரி, உடமையைப் பறிக்கும் வகையில் மிக அதிகமாக இருக்கிறது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கமாட்டார்களா? தொழில் நிறுவனங்கள் மீது 15%, 22%, 30% என்றும், தனிநபர் வருமானம் மீது அதிகபட்சம் 42.8% என்ற அளவிலும் இப்போது வரி வசூலிக்கப்படுகிறது. யோசனையை ஏற்றால் இதுவும் ‘கப்பார் சிங் வரி’ போல (ஜிஎஸ்டி) கசக்கிப் பிழிவதாக இருந்துவிடாதா?

பிறகு இந்த எருது மீதான வாரிசுரிமை வரியை எல்லோருமே சேர்ந்து எதிர்ப்பார்களே? இந்த வரி விகிதம் தொடர்பாகவே நாடாளுமன்றத்தில் பல நாள்களுக்கு விவாதங்கள் நடக்குமே?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

குற்றப்பதிவு நடைமுறை

வரிச் சட்ட வழக்குகளில் முக்கியமானது, அந்தக் குற்றம் எப்படிப்பட்டது என்று சட்டம் தந்துள்ள பெயரைச் சார்ந்தது. எனவே சட்டத்தை இயற்றுகிறவருக்கு, இந்தச் சட்டத்துக்கு எந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முடிவுசெய்வதில் பெரிய குழப்பமே ஏற்படும். இதற்கு எந்தப் பெயர் கொடுத்தாலும் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு ஓய்வே இருக்காது என்பதை உணர்ந்து, நேரடி வரிகள் வாரியம் - வாசக வரைவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

தனித்துவமான வரி?

இந்த யோசனையைக் கூறியவர் எருதுகளுக்கு மட்டும் 50% என்ற விகிதத்தில் தனித்துவமான வரி ஆலோசனையை வழங்கியிருக்கிறார், இறந்தவர் விட்டுச் செல்லும் பிற உடமைகள் குறித்து ஏதும் கூறவில்லை. எருதுகளுக்கு மட்டும் சிறப்பிடம் தர வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். இந்தியப் புராணங்களின்படி இறப்புக் கடவுளான எமன், எருதின் மீதுதான் வருவார். 

மனிதர்கள் சவாரி செய்யும் சைக்கிள், பைக், கார் ஆகியவற்றுடன் எருதை ஒப்பிடுவது பெரிய மத அவமதிப்பாகக்கூட பார்க்கப்படலாம். வரி வருமானத்தை, பெருக்குவதிலேயே பேராசை கொண்ட நேரடி வரிகள் வாரியம், வாரிசுரிமை வரி இனத்தில் எருதையும் சேர்க்குமாறு நிதியமைச்சரை சம்மதிக்க வைக்க முடிந்தால், செல்வம் தொடர்பான வரிவிதிப்பில் எருதும் சேர்க்கப்பட்ட ‘முற்போக்கு வரி’யாக அது மாறிவிடும்!

எருதுதான் எதிர்காலம்

நரேந்திர மோடிக்கு பொது நிதி தொடர்பாக அபாரமான ஞானம் – அதிலும் குறிப்பாக வரிவிதிப்புக் கொள்கைகள் தொடர்பாக – உண்டு.

புரட்சிகரமான வரி யோசனையைத் தெரிவித்திருக்கிறார் அது எதிர்கால வரிக் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு முன்மாதிரியாகவே திகழும். ‘ரொக்க எரு’தைக் கறக்க, எருது வளர்ப்பை ஒன்றிய அரசு இனிப் பெரிய அளவில் மேற்கொள்ளவும் கூடும்; மாவட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு என்ற அளவில் ரூ.8,06,000 கோடியை இதற்காகவே தொடக்க நிலையில் ஒதுக்கவும் கூடும்.

விவசாய நிலங்களை உழும் இயந்திரங்கள், டிராக்டர்களுக்குப் பதிலாக ஆண் எருதுகள் இனிப் பயன்பாட்டுக்கு வரலாம். இதனால் கோடிக்கணக்கான லிட்டர் டீசல் மிச்சப்படும். எருதுகளின் சாணம், தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயன உரங்களுக்குத் தகுந்த மாற்றாகவும் கூடும். இந்தியர்களுடைய தேர்வு, இனி எருமைப் பாலாகவேகூட அமையும்.

‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவருடைய இந்த யோசனைக்குத் தலை வணங்குகிறேன். பிற நாடுகளை மிஞ்சும் வகையில் தேசிய விலங்கு / பிராணி சின்னத்தில் இனி அற்புதமான புலியுடன், பல்வகைப் பயன்பாட்டுக்குமான எருதும் இடம்பெற்றுவிடும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!
‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?
மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கை
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1



1



ஜெஇஇகாந்தாரா: பேசுவது தெய்வமாkelvi neengal pathil samasதமிழாசிரியர்கள்ஞாலப் பெரியார்மூன்றாவது முறை பிரதமர்சவுக்கு சங்கர் சுவாமிநாதன்‘பிஎஸ்ஏ’ பரிசோதனைதேர்தல் இலக்கணத்தையே மாற்ற முயல்கிறார் மோடி!தனியார் பள்ளிமனுராஜ் சண்முகசுந்தரம் கட்டுரைகுளோக்கல்சிறந்த பேச்சாளர்லிண்டன் ஜான்சன்நெதன்யாஹுஓய்வுதேசிய நிறுவனங்கள்நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: நாட்டுப்பற்றுகுளோபலியன்_ட்ரஸ்ட்தமிழ்ச் சூழல்அருண் மைராராஜுகோர்பசெவின் கல்லறை வாசகம்புதிய உத்வேகம்நிகழ்நேரப் பதிவுகள்வைக்கம் வீரர்ஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்!தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா!மார்க்ஸிய அறிஞர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!