பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் மருத்துவம், பொறியியல் பட்டம் பெற கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மாணவர்களின் எதிர்பார்ப்பு. பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளில் சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் கனவு காண்பார்கள். இவற்றுக்கான தேர்வுகளை எழுதும் அனைவருமே அதில் வெற்றிபெற்றுவிடுவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும், நேர்மையான தேர்வுமுறை இருந்தால் தகுதியுள்ள மாணவர்களின் ஆசைகள் நிறைவேற நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவக் கல்விக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வில் (நீட்) வினாத்தாள்கள் சில ஊர்களில் கசிந்ததைப் பார்த்தோம். உடனே பல மாநிலங்களிலிருந்து, ‘நீட்’ தேர்வையே ரத்துசெய்துவிட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. இந்தக் கோரிக்கைகள் மாணவர்களிடமிருந்து நேரடியாக வருவதைவிட, பல அரசியலர்களிடமிருந்துதான் ஆவேசமாக வெளிப்பட்டது சுவாரசியம்.
இந்த முறையை ரத்துசெய்துவிட்டால், வேறு எப்படி மாணவர்களைத் தேர்வுசெய்வது? ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்னால் நாட்டிலிருந்த நடைமுறை என்ன? அதிலிருந்த நிறைகள் – குறைகள் என்ன? ‘நீட்’ தேர்வுக்கு அவசியம் ஏன் ஏற்பட்டது? பழைய முறையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கப்படலாம் என்று முடிவுசெய்தால், அதன் பலன் யாருக்கு அதிகம் கிடைக்கும்? மருத்துவப் படிப்பில் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் சேர்வதற்கான நடைமுறை ‘நீட்’ வந்ததற்குப் பிறகு இயல்பாக இருக்கும் நிலையில், ‘நீட்’ தேர்வின் நன்மை, தீமைகளையும் விருப்பு–வெறுப்பு இல்லாமல் ஆராய்வது நல்லது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
யுபிஎஸ்சி
வினாத்தாள் கசிவது ‘நீட்’ தேர்வில் மட்டுமல்ல, ஒன்றிய அரசு நடத்தும் ஒன்றிய பொதுத் தேர்வாணையத் தேர்விலும் (யுபிஎஸ்சி) சில வேளைகளில் - சில இடங்களில் நடக்கிறது. நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்காக ‘நீட்’ தேர்வே கூடாது என்பது முறையா என்று முதலில் ஆராய வேண்டும்.
முந்தைய கதை என்ன?
‘நீட்’ தேர்வு அறிமுகமாவதற்கு முன்னால், மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்தியது. ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 15% இடங்கள், இந்தத் தேர்வில் தேறிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ‘நீட்’, ‘யுபிஎஸ்சி’ தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது உண்மையே. அரசு உடனே இந்தத் தேர்வுகளைச் சில இடங்களில் ரத்துசெய்துவிட்டு, மாற்றுத் தேர்வுக்கு ஏற்பாடுசெய்தது, கசிவுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.
இனி வினாத்தாள்கள் கசியாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டிருக்கிறது. எந்தவொரு உயர்கல்விக்கும், வேலைக்கும் இரண்டு வகையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலில் எழுத்துத் தேர்வும், பிறகு ‘வாய்மொழித் தேர்வாக’ நேர்காணல்களும் நடக்கின்றன. சிலவற்றில் ஒன்று மட்டுமேயும், சிலவற்றுக்கு இரண்டும் சேர்ந்தும் நடத்தப்படுகின்றன.
கல்வி நிலையங்களில் சேர்க்க, எழுத்துத் தேர்வுதான் சிறந்தது. எனவே, தேசியக் கல்வி நிறுவனங்களும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களும் இதையே கடைப்பிடிக்கின்றன.
தனியாரில் சர்ச்சை
தனியார் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை என்பது சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குச் சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்தின. தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமல்லாமல், வேறு காரணங்களுக்காகவும் கல்லூரிகளில் பயில இடங்கள் வழங்கப்பட்டன. இது பெரிய தொழிலாகவே விரிந்து ஏராளமான இடைத்தரகர்களும் உருவானார்கள். பணம் படைத்தவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், முதுகலை மருத்துவப் படிப்புகள் எளிதில் கிடைத்தன.
நல்ல படிப்பாளியாக இருந்தாலும், நடுத்தர வர்க்க மாணவர்கள் இடம் கிடைக்காமல் வேறு படிப்புக்குச் செல்ல நேர்ந்தது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கர்நாடகத்தில் இந்தத் தேர்வுகளை மிகுந்த நேர்மையாகவே நடத்தினர். சில தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதவே மிகப்பெரிய காப்புத்தொகையைச் செலுத்த வேண்டும் என்ற முன்நிபந்தனைகளும் நிலவின. பணக்காரர்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைப்பதற்காகவே பல முறையற்ற வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
2012இல் அரசின் முடிவு
வெவ்வேறு மாநிலங்களிலும் தனியார் கல்லூரிகளிலும் கணக்கில்லாமல் நடைபெற்றுவந்த இந்த நுழைவுத் தேர்வுகளை நிறுத்திவிட்டு, நாடு முழுவதற்கும் பொதுவாகவே தேர்வுகளை நடத்துவது என்று ஒன்றிய அரசு முடிவுசெய்தது. தனியார் கல்லூரிகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அரசே இப்படிப் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது தனியார் கல்வி நிலையங்களின் உரிமைகளில் குறுக்கிடுவது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
09 Apr 2022
ஐஎம்சி, டிசிஐ வழக்கு
நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, இந்திய மருத்துவப் பேரவையும் (ஐஎம்சி), பல்மருத்துவ இந்தியப் பேரவையும் (டிசிஐ), பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக நீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2013இல் மனு அளித்தன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரித்து, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் பிறப்பித்த தீர்ப்பை ரத்துசெய்தது, பொது நுழைவுத் தேர்வு அரசமைப்புச் சட்டப்படிச் செல்லத்தக்கது என்று தீர்ப்பு வழங்கியது.
தகுதி அடிப்படையில்
இப்போது ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் கல்லூரி – பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பரம ஏழை மாணவர்களால்கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது. இந்த ஜனநாயக நடைமுறை மாணவர்களிடையே கல்வி பெறுவதில் ‘சமத்துவ’த்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசுக் கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இப்போதும்கூட முறையற்ற வழிகளில் நன்கொடை அல்லது கட்டாயக் கொடை பெறுவதும் தொடர்கிறது என்ற புகார்கள் வருகின்றன, இவையெல்லாம் பணம் படைத்தவர்களுக்குச் சாதகமானவை.
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
அகில இந்திய ஒதுக்கீடு நோக்கித் தமிழக மாணவர்கள் கவனம் திரும்ப வேண்டும்
24 Jul 2023
‘நீட்’ தேர்வுக்குப் பிறகு, முறையற்ற வழிகளில் கோடிக்கணக்கில் பலர் சம்பாதித்துக்கொண்டிருந்த வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன. வினாத்தாள் கசிவுக்குப் பிறகு மீண்டும் ‘நீட்’ எதிர்ப்பு கோஷங்களை, சுயநலமிக்க சிலர் - அதிலும் சொந்தமாக மருத்துவக் கல்லூரிகளை நடத்துவோர் ஊக்குவித்துவருகின்றனர். அவர்கள் கோரும்படி மருத்துவக் கல்லூரி இடங்களை அவரவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதித்தால் மீண்டும் இடங்களைக் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கும் முறையற்ற நடைமுறைகளே ஆதிக்கம் செலுத்தும்.
தொடர்புடைய கட்டுரைகள்
உயர்கல்விக்கு 3 சீர்திருத்தங்கள்
மருத்துவக் கல்வி எளிது
அகில இந்திய ஒதுக்கீடு நோக்கித் தமிழக மாணவர்கள் கவனம் திரும்ப வேண்டும்
நீட்: உலகம் எப்படி அணுகுகிறது?
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
ஒடுக்குமுறைத் தேர்வுகள்
மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்
தமிழில்: வ.ரங்காசாரி
1
1
பின்னூட்டம் (8)
Login / Create an account to add a comment / reply.
Saran Viveka 2 months ago
I am surprised to see such an article published in Arunchol. The article completely overlooks critical factors and key complexities surrounding the NEET issue, presenting weak arguments in favor of NEET without addressing the core concerns. Rather than tackling the actual problems with NEET, it diverts attention by superficially addressing other "justifiable issues," giving the impression of a pragmatic approach when it is anything but. It is disappointing to encounter such a weak article on such a well-debated and important issue. "‘நீட்’ தேர்வின் நன்மை, தீமைகளையும் விருப்பு–வெறுப்பு இல்லாமல் ஆராய்வது நல்லது." என்று கட்டுரைக்கு ஆரம்பம் கொடுத்துவிட்டு நீட்டின் ஆதார தவறை, அடிப்படையையே பேசாமல் "ஒரு தவறு நிகழ்ந்ததால் , அதை காரணமாக வைத்து மொத்தத்தையும் நிராகரிக்க கூடாது" எனும் ஒரு பொதுவான அடிப்படையில் கட்டுரையை சமைத்திருக்கிறார். நேர்மையாக எழுத நினைத்திருந்தால், நீட் பற்றி எழும் ஆதார எதிர்ப்புகளுக்கான அடிப்படையில் கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். அப்படி எழுதப்படாதது ஆச்சர்யமில்லை, ஆனால் அதை அருஞ்சொல் பதிப்பித்திருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சர்யம்.
Reply 3 0
Raja 2 months ago
I was also surprised by the Arunchol publishing this type of article!
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 months ago
மேற்கண்ட கட்டுரை, முருகன் லோகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் அவர்களின் கருத்துக்களைப் படித்தேன். முதலில் அருஞ்சொல் இதழில் இப்படிப்பட்ட கட்டுரை வெளிவந்தது அதிர்ச்சியாக இருந்தது. மாற்றுக் கருத்து உடையோரை வாசிப்போம் எனத் தொடங்கினால் கட்டுரையில் வெறும் ஓட்டை உடைசல் வாதங்களே உள்ளன. வெறும் நேர விரையம். இந்தக் கட்டுரையை எழுதியுள்ள அஸ்வினி மகாஜன் என்கிற அறிஞரின் வேறு கட்டுரைகள் சிலவற்றைத் தேடிப் பார்த்தேன். அவற்றில் தலைப்புகள் பின்வருமாறு, 1. சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை கீழே தள்ளிவிடும். 2. பஞ்சாப் முதல் ஆந்திரா தெலுங்கானா வரை: மாநில அரசுகளின் இலவசங்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. 3. இந்தியாவை மதத்தால் பிரிப்பது பிரதமர் அல்ல, சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்போர். 3. கற்ற பெண்கள் குறைந்த அளவிலான குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. 4. அதானி நிறுவனப் பங்குதாரர்கள் மிகவும் துன்பமடைந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஹிடன் பார்க் குழப்பத்தை வைக்க வேண்டும்.
Reply 2 0
Raja 2 months ago
"நீட்’ தேர்வுக்குப் பிறகு, முறையற்ற வழிகளில் கோடிக்கணக்கில் பலர் சம்பாதித்துக்கொண்டிருந்த வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன" - இந்த வரிகளை படிக்கையில் எந்த உலகத்தில் இருந்து கொண்டு எழுதுகிறார்கள் என்று தோன்றியது. பிறகு எதோ கட்சிக்காரர் எழுதிய கட்டுரை போல என்று நினைத்துக் கொண்டேன்! உங்களின் கமெண்ட் பார்த்த பிறகு எனது சந்தேகம் உறுதியானது.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
MURUGAN LOGANATHAN 2 months ago
கடமைக்கு என்று எழுதப்பட்ட கட்டுரை. பயிற்சி நிலையங்களின் ஆதிக்கம் , பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் குறைந்துவருவது பற்றிய தகவல் இல்லை.not only neet exam, any entrance exam for academic purpose in India is useless and bias. We never compare NEET and UPSC in single hand. if entrance exams are create quality, what is the purpose of school education and its examination. We must think of it.
Reply 5 0
Raja 2 months ago
Yes, this writer doesn't even bother about how training institutes are dominating this exam and how poor people are completely out of the picture in this exam.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 2 months ago
இந்தக் கட்டுரை பல அடிப்படைத் தவறுகளை செய்கிறது. முதலில், மருத்துவம் போல ஒரு அடிப்படைக் கல்லூரி அட்மிஷனையும் , கல்லூரி முடிந்து வேலைக்காக தேர்ந்த்தேடுக்கப்படும் ஒரு முறையையும் சமமாக ஒப்பிடுகிறது. இது முதல் தவறு. தமிழகத்தில் 1983 வரை +2 மதிப்பெண்களின் தர வரிசைப்படி, ஒரு 20 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வு இருந்தது. அந்த நேர்முகத் தேர்வில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அதையடுத்து பள்ளி மதிப்பெண்களுடன், 50 மதிப்பெண்களுக்கு தமிழ்நாடு அரசே நுழைவுத் தேர்வை நடத்தியது. அந்த முறையில், பெரும்பாலும் நகர்ப்புற மாணவர்களே முதன்மை பெறுகிறார்கள் என்பதை தரவுகள் வழி ஆராய்ந்த முன்னாள் ஐஐடி சேர்மேன் அனந்த கிருஷ்ணன் கமிட்டி, பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண்களின் படி மருத்துவக் கல்லூரிகளுக்கான அட்மிஷனை நடத்தலாம் எனப் பரிந்துரைத்தது. அதன் படி, 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகள், கணினிமுறையிலான வெளிப்படையான கலந்தாய்வின் வழி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சீட்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசுக்கு கோட்டாவான 60% சீட்களுக்கும் அட்மிஷன் நடந்தது. பள்ளித் தேர்வு என்பது, இருக்கும் அனைத்துத் தேர்வுகளையும் ஒப்பிட்டால், ஒரு சமத்துவமான தேர்வு. சிறு கிராமத்தில் உள்ள மாணவர்களும் படிக்கும் நிலை உருவானது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 40% மேனேஜ்மென்ட் கோட்டா சீட்கள், குறைந்த பட்சம் 60% மதிப்பெண் வாங்கிய பணமுள்ள மாணவர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வின் அடிப்படையே வேறு. அது நீட் தேர்வின் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து நடத்தப்படும் அட்மிஷன். 12 ஆண்டுகள் பள்ளியில் படிக்கும் மாணவனின் மதிப்பெண்ணை அது கணக்கில் கொள்வதேயில்லை. இதன் விளைவாக, வசதி படைத்த மாணவர்கள் கோட்டா, தில்லி போன்ற நகரங்களுக்குச் சென்று புகழ்பெற்ற கோச்சிங் செண்டரில் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களது பள்ளிகள் இதைக் கண்டு கொள்வதேயில்லை. இந்தக் கட்டுரை மேலும், நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்கள் பயன் பெறுகிறார்கள் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைச் சொல்கிறது. குறைந்தது 1-2 லட்சம் செலவு செய்து கோச்சிங் செண்டர் செல்லாமல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது கடினம் என்னும் தடை இருக்கையில் இது எப்படி ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்? தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசே இலவசமாக கோச்சிங் கொடுத்து, அவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் 7.5% இடங்களை ஒதுக்கியுள்ளதால் மருத்துவக் கல்லூரிகளில் இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் பயில்கிறார்கள்.. அதற்கும் நீட் தேர்வுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதற்கு முன்பு இலவசமாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பள்ளியிறுதி மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த அரசு மருத்துவ கல்லூரி அட்மிஷன் இன்று 1 -2 லட்சம் ரூபாய் கோச்சிங் செண்டருக்கு கொடுத்த பின்னரே கிடைக்கிறது. இதுதான் நீட் தேர்வு செய்துள்ள புரட்சி. மேலும் தனியார் கல்லூரி மேனேஜ்மென்ட் கோட்டா சீட்கள் இன்றும் பணமுள்ளவர்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் நீட் தேர்வில் ஒன்றிரண்டு தேர்வுகளில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சீட்கள் கிடைத்துள்ளன. எனவே, மருத்துவக் கல்லூரி அட்மிஷன்களில் பணம் இன்னும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. நீட் தேர்வு அவற்றையெல்லாம் ஒழித்துவிட்டது என்பது பொய். மொத்தத்தில் உண்மை நிலையைக் கொஞ்சமம் கருத்தில் கொள்ளாத மேலோட்டமான கட்டுரை
Reply 4 0
Raja 2 months ago
துல்லியமாக சொல்லி இருக்கீங்க, தெளிவான விளக்கம். ! உங்களின் கமெண்ட் சிறப்பு. "நீட்’ தேர்வுக்குப் பிறகு, முறையற்ற வழிகளில் கோடிக்கணக்கில் பலர் சம்பாதித்துக்கொண்டிருந்த வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன" - இந்த வரிகளை படிக்கையில் எந்த உலகத்தில் இருந்து கொண்டு எழுதுகிறார்கள் என்று தோன்றியது. பிறகு எதோ கட்சிக்காரர் எழுதிய கட்டுரை போல என்று நினைத்துக் கொண்டேன்!
Reply 7 0
Login / Create an account to add a comment / reply.