கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடி

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
23 May 2024, 5:00 am
0

க்களவை பொதுத் தேர்தல் (2024) ஐந்தாவது கட்டத்தில் 49 தொகுதிகளில்தான் வாக்குப்பதிவு நடந்தது; தொகுதிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது இந்தக் கட்டம். இந்தக் கட்டத்தில் சில முக்கியமான தொகுதிகள் இருக்கின்றன என்பதால் மட்டும் அரசியல் வானில் பரபரப்பு ஏற்பட்டுவிடவில்லை, எட்டு மாநிலங்களில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் பாஜகவுக்கு மிகப் பெரிய இழப்புகள் ஏற்படப்போகிறது என்பதால்தான் பரபரப்பு.

அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ராய்பரேலி, அமேதி, ஃபைசாபாத் (அயோத்தி) உத்தர பிரதேசத்திலும், சரண் (முன்னர் சாப்ரா), ஹாஜிபூர் பிஹாரிலும், மும்பையின் ஆறு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் நிகழ்ந்ததைப் போலவே இந்தக் கட்டத்திலும் பாஜக கூட்டணி அதிகத் தொகுதிகளை இழக்கப்போகிறது. 49 தொகுதிகளில் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளை அது வென்றது. பாஜகவுக்கு மட்டும் அதில் 32 தொகுதிகள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இப்போது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்போது மொத்தம் வென்ற தொகுதிகள் 8. ஆனால், இந்த முறை அந்தக் கூட்டணி அதைப் போல இரண்டு மடங்குக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். 2019க்குப் பிறகு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் விழுந்த வாக்குகளைக் கவனித்தால் இது தெளிவாகும்.

அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகத்தான் வாய்ப்பு இருக்கிறது என்பதால் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும். 49 தொகுதிகளில் நாலில் ஒரு பங்குகூட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்குக் கிடைக்கலாம்.

கடந்த தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் கிடைத்த தொகுதிகள் எண்ணிக்கை இடைவெளி 31 ஆக இருந்தது, இப்போது 17ஆகக் குறையும் அறிகுறிகள் தெரிகின்றன. இது மேலும்கூட அதிகரிக்கலாம். உத்தர பிரதேசத்திலிருந்து அதிக தொகுதிகள் ‘இந்தியா’ கூட்டணிக்கே கிடைக்கும்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடந்த 14 தொகுதிகள் அவத், பூர்வாஞ்சல், தோப், புந்தேல்கண்ட் பகுதிகளில் உள்ளன. இவற்றில் அதிக தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றிவிடும். 2019இல் பாஜக 13 தொகுதிகளைக் கைப்பற்றியது, காங்கிரஸ் ராய் பரேலியில் மட்டும் வென்றது. 2022 சட்டமன்ற பொதுத் தேர்தலில் விழுந்த வாக்குகளை ஆராய்ந்தால், ராய்பரேலியில் ராகுல் காந்தி இந்த முறை வெல்வார். அமேதி, பாராபங்கியிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்.

காங்கிரஸின் பெரிய தோழமைக் கட்சியான சமாஜ்வாதி, பூர்வாஞ்சலில் கோசாம்பி, தோப் பகுதியில் ஃபதேபூர், புந்தேல்கண்டில் பண்டா தொகுதிகளில் வெற்றிபெறும். அயோத்தி கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பதைப் பார்க்க வேண்டும். வாக்குப்பதிவு சதவீதமும் முக்கியம்.

மஹாராஷ்டிரத்தில் அசல் – நகல்

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனையின் உத்தவ் பிரிவு - ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்சந்திர பவார் பிரிவு – அஜீத் பவார் பிரிவு ஆகியவற்றுக்கு இடையே, அதாவது அசல் – நகல்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. மகா மும்பை, இந்தியாவின் வெங்காயத் தலைநகரம் நாசிக், ஒரு காலத்தில் கைத்தொழில் துறையின் மிகப் பெரிய உற்பத்தி மையம் மாலேகாவோன் – துலே ஆகியவற்றில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

உத்தவ் சேனா முதல் முறையாக மராத்தா – முஸ்லிம்கள் என்ற இரண்டு பெரிய ‘எம்’ சக்திகளை ஒன்றிணைத்துப் போராடுகிறது. மும்பையின் ஆறு தொகுதிகளில் ஐந்து, இப்போது உத்தவ் சேனாவிடம்தான் இருக்கிறது. உத்தவ் தாக்கரேவின் கூட்டணியில் தோழமைக் கட்சிகள் உத்தவை மிகவும் மதிக்கின்றன.

அவருடைய 2019-2022 ஆட்சிக்காலம் (இரண்டரை ஆண்டுகள்) நடுநிலையாகவும் தங்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததாகவும் இருந்ததாகவே முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். மும்பையில் சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் தாய்க் கட்சியுடன் விசுவாசமாக இருக்கின்றனர். எனவே, இந்த ஆதரவெல்லாம் ‘இந்தியா’ கூட்டணியின் தொகுதிகளைத்தான் அதிகரிக்கச் செய்யும்.

கிழக்கு மாநிலங்கள்

மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்டிலும் இந்தியா கூட்டணிக்கு தொகுதிகள் கிடைக்கவே வாய்ப்பு அதிகம். பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாப்ராவில் தன்னுடைய பாரம்பரியமான வாக்கு வங்கிக்குப் புத்துயிர் அளித்து கைப்பற்றப்போகிறது. மிதிலாஞ்சலில் ஒரு சில தொகுதிகளும், ராம்விலாஸ் பாஸ்வான் போட்டியிட்ட ஹாஜிப்பூரும் (சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார்) பாஜக கூட்டணிக்குக் கிடைக்கக்கூடும்.

மேற்கு வங்கத்தின் வடக்கு பர்காணா பிரதேசத்திலும் ஹூக்ளி, ஹௌரா தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்படி பார்த்தால் பாரக்பூர், ஹூக்ளியில் பாஜகவுக்கு ஆபத்து காத்திருக்கிறது. அதேசமயம் ஆரம்பாக் தொகுதியைத் திரிணமூல் காங்கிரஸிடமிருந்து பாஜக கைப்பற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோதர்மா தொகுதியை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும், அங்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எம்எல்ஏ போட்டியிடுகிறார். கோதர்மாவின் சட்டமன்ற தொகுதியான காண்டேயில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஒடிஷாவில் 2019இல் தனக்குக் கிடைத்த 5 மக்களவைத் தொகுதிகளையும் 35 சட்டமன்ற தொகுதிகளையும் தக்கவைக்க பாஜக நினைக்கிறது. ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்த நவீன் பட்நாயக் இந்த முறை 2 தொகுதிகளிலிருந்து போட்டியிடுகிறார். 2019இல் தான் வென்ற பர்கா, சுந்தர்கர், போலாங்கிர் தொகுதிகளைத் தக்கவைக்க பாஜக முயல்கிறது. கந்தமால், அஸ்கா தொகுதிகளை பிஜு ஜனதா தளம் கடந்த முறையே வென்றது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியின் பாராமுல்லா, லடாக் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. பொறியாளர் ரஷீத் சிறையிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதால் உமர் அப்துல்லா மும்முனைப் போட்டியை எதிர்கொள்ள நேர்ந்தது. லடாக் தொகுதி ‘இந்தியா’ கூட்டணிக்குத்தான் என்று சமீப நாள்கள் வரை உறுதியாக இருந்தது. ஆனால் தேசிய மாநாடு, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் கார்கில் பகுதித் தொண்டர்களும், லே தொகுதியில் நிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக களமிறங்கியுள்ளதால் வாக்குகள் ‘இந்தியா’ – பாஜக கூட்டணிக்கிடையே பிளவுபட வாய்ப்பு அதிகமாகிவிட்டது.

எங்களுடைய கணிப்புப்படி, முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளிலேயே பாஜக கூட்டணிக்கு முன்னர் கிடைத்த தொகுதிகளிலேயே 40 குறைந்துவிட்டது, இந்தக் கட்டத்திலும் அது தொடர்கிறது. இனி இந்த இழப்புகளைச் சரிசெய்யும் அளவுக்கு அதனால் கூடுதல் தொகுதிகளை அடுத்த இரு கட்டங்களில் பெற வாய்ப்பு குறைவு. எனவே, பெரும்பான்மையை இழந்துவிட்டது பாஜக என்பது உறுதி.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்
பாஜகவுக்கு இப்போதே 272 நிச்சயமில்லை
முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி
வடக்கு: மோடியை முந்தும் யோகி
ததும்பும் மேற்கு
வேலைவாய்ப்பின்மை, வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவுகள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






இந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத இந்தியமயம்இன்று மும்பைலால்பகதூர் சாஸ்திரிதீண்டாமைஅப்பாவுவின் யோசனை ஜனநாயகத்துக்கு முக்கியமானதுபோபால்அருஞ்சொல்எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் தேர்தல் முடிவுதிரைக்கலை அறிஞர்ஜனநாயக நெருக்கடிசரண் பாதுகா யோஜனாமோடி 2.1!வெளிவராத உண்மைகள்முதலிடம்மாம்பழம்சித்ரா பாலசுப்பிரமணியன்ஹார்மோன்கள்நாத்திகர்சமூக ஜனநாயகக் கட்சிபெருமழையார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி?க்ரானிக் கிட்னி டிசீஸ்திருக்கோவிலூர்சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்தை உண்டாக்கும்தெலங்கானா முதல்வர்மக்களவை தேர்தல்எல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?சித்தர்கள்இன்டியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!